Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும் ; ரவிகரன் எம்.பி

மீனவர்கள், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரையேறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச்செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.    

எனவே மீனவர்களின் நலன்கருதி முல்லைத்தீவு கடற்கரையில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது.   

குறித்த தீர்மானம் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

முன்பு முல்லைத்தீவு - மணற்குடியிருப்புப் பகுதியில் வெளிச்சவீடொன்று இருந்தது. அது தற்போது முற்று முழுதாக அழிவடைந்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொக்கிளாயிலிருந்து பேப்பாரப்பிட்டிவரை சுமார் 74 கிலோமீற்றர் வரையிலான கடற்கரையோரத்தில் அதிகளவான மீன்பிடித் துறைகளிலிருந்து, மீனவர்கள் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேரந்த மீனவர்கள், முன்பு வெளிச்சவீட்டின் உதவியுடன் இடர்பாடுகளின்றி கடலுக்குச்சென்று தமது துறைகளில் கரையேறுவார்கள். 

தற்போது வெளிச்சவீடு முற்றாக அழிவடைந்துள்ளதால் மீனவர்கள், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரையேறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். 

கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில், கடற்றொழில் அமைச்சருடனும் பேசியுள்ளேன். அவரும் வெளிச்சவீட்டினை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

எனவே இந்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், ஏற்கனவே முன்பிருந்த இடத்தில் வெளிச்சவீட்டை அமைப்பதென ஒரு தீர்மானத்தை எடுப்பதுடன், அந்தத்தீர்மானத்தை கடற்றொழில் மைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் நடவடிக்கைக்காக் அனுப்பிவைப்பதென்ற ஒரு தீர்மானத்தையும் எடுப்போம்  என்றார்.  

இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அனுப்பிவைப்பதென்ற முடிவும் எடுக்கப்பட்டது.