Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராஜாவுக்கு அனுதாபமும் புகழாரமும்!

தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளைக் கோரி ஆயுத வழியில் பயணித்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதிவரை அஹிம்சை வழியில் சேனாதிராஜா.

தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளைக் கோரி ஆயுத வழியில் பயணித்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக்காக இறுதிவரை அஹிம்சை வழியில் பயணித்து, அரசியல் செய்த பெரும் தலைவர் மாவை சேனாதிராசா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க புகழாரம் சூட்டினார்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் , உறுப்பினர்கள் அமரர் மாவை சேனாதிராசாவின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்தனர்.

அரசியல் கட்சித் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரிசாட் பதியூதீன். ரவூப் ஹக்கீம் உட்பட சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், குகதாசன், ஸ்ரீ நேசன் ஆகியோர் அனுதாபம் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ. சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, டொனால்ட் திசாநாயக்க, சூரியபெரும ஆகியோருக்கான அனுதாப பிரேரணையின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனுதாபம் தெரிவித்தனர்.

எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்காக தன்னை இறுதிவரை அர்ப்பணித்தவர் மாவை சேனாதிராஜா.அவர் பிறந்தது முதல் இறக்கும் வரை தனது சொந்த மண்ணிலேயே இருந்தார். அரசியல் செய்தார். 

தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் கொழும்பில் வாழ்ந்த போதும் மாவை சேனாதிராஜா தனது சொந்த மண்ணில் தான் வாழ்ந்தார்.தனது மக்களுக்காக பல சாத்விக போராட்டங்களில் அவர் முன்னின்றார். எம்முடன் எப்போதுமே அவருக்கு நல்லுறவு இருந்தது என்றார்.