Breaking News
2000 ஆண்டுகள் பழமையான தங்க கிரீடம் திருட்டு,,,நெதர்லாந்து அருங்காட்சியகம்,
,
நெதர்லாந்திலுள்ள அருங்காட்சியகமொன்றில் பார்வையாளர்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ரோமானியா நாட்டின் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான டசியா நாகரிகத்துக்குரிய தங்க கிரீடம் மற்றும் தங்கக் காப்புகள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளது.
குறித்த அருங்காட்சியகத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால்தான் திருட்டுச் சம்பவம் நடந்ததாக நெதர்லாந்து மீது ரோமானிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது
இந்தநிலையில் திருட்டுப்போன தங்க கிரீடம் மற்றும் காப்புகளை மீட்க நெதர்லாந்து பொலிஸார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.