பலதும் பத்தும் -17,02,2025 -கதிரையும் கள்ளத்தனமும்?.
.

இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவம் பணிப்புரை விடுத்துள்ளது. வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது. இதன்போது 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம்நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்கஎதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிசட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஞாயிற்றுக்கிழமை (16) மறுக்கப்பட்டிருந்தது. மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதமரை சந்திக்க வந்த கேப்பாபிலவு மக்கள் அவரை சந்திக்க முடியாது ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி காணி உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். தாம் அமைச்சர் சந்திரசேகரனின் அழைப்பின் பேரில் காணி விடுவிப்பு தொடர்பாக வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை. என்ற கருத்து இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது இவர்களை நம்பாத தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கில்பெரிய காய் நகர்த்தல் ஒன்றிற்கான முன்னேற்பாடு. வவுனியா வடக்கில் கச்சல்சமளங்குளத்தின் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட சபுமல்கஸ்கட விகாரையை அண்மித்தபகுதியில் தொல்லியல் அகழ்வு ஆரம்பமாகியுள்ளது.