வெள்ளை வானில் கடத்தியவர்களை முதலைக்கு இறையாக்கியமை உண்மை - ராகித சேனாரட்ண
.
வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைக்கு இறையாக்கியமை உண்மை என்பது நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராகித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு சில உடல் பாகங்களை அகற்றி பின்னர் சடலங்களை முதலைக்கு உணவாக வழங்கியமை விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார். இந்த விடயத்தை குற்ற விசாரணை பிரிவினர் தமக்கு அறியத் தந்ததாக முன்னாள் அமைச்சர் சேனாரத்ண தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பில் உத்தியோகராக கடமையாற்றிய பின்னர் குற்றப்பலனாய்வு பிரிவில் இணைந்து கொண்ட நபர் இந்த உண்மைகளை மூடி மறைக்க உதவியுள்ளதாக ராகித சேனாரட்ண மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி காலத்தில் இந்த விசாரணைகள் ஸ்தம்பிதம் அடைந்தமைக்கு ஒரு சிலரின் தேவையற்ற பதற்றமே காரண மாகும். அப்போதைய போலீஸ் குற்றப் பிரிவின் பிரதான அதிகாரி ஒருவரினது செயற்பாடுகளும் இந்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இடையூறாக அமைந்ததாயினும் இவ்வாறான குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிப்பதற்கு அரசாங்கம் ஒன்றுக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என ராகித சேனாற்றின கூறியுள்ளார்