போதைப்பொருள் விற்பனையில் சிறிலங்கா இராணுவம்!
இராணுவப் பணியிலிருந்து விடுமுறையில் வந்தபோது குறித்த சிப்பாய் மக்களைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் சுற்றிவளைப்பு சிறப்பு நடவடிக்கையொன்றில், போதைப்பொருள் வைத்திருந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் கந்தேகெடிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த இராணுவ சிறப்பு படையின் ஒரு சிப்பாய் மற்றும் அவருடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரும் அடங்குவர்.
பலகொல்ல, கந்தேகெடிய, தலதென, மீகஹகிவுல, அக்கலவுல்பொத்த மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20-43 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான இராணுவச் சிப்பாய் முதலில் பலகொல்ல பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்த ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே ஏனையவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் பணியிலிருந்து விடுமுறையில் வந்தபோது குறித்த சிப்பாய் மீகஹகிவுல கந்தெகெட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


