Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூடம்!

.

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற மாநகரின் மாதாந்தக் கூட்டத்தில் குறித்த விடையம் தொடர்பில் முதல்வர் திருமதி மதிவதனி விடையத்தை முன்வைத்து சட்ட ரீதியான ஆலோசனைக்கான அனுமதி முன்மொழிவை சமர்ப்பித்தார்.

இன்நிலையில் மக்களின் நலன் சார் விடையமாக இவ்விடையம் இருப்பதால்  இதில் இரு தரப்பையும் ஒரு சமரசத்துக்கு இணங்கச் செய்து தீர்வை காண வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி உறுப்பினரும்.முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி வலியுறுத்தியதுடன் சட்டரீதியான நடவடிக்கை குறித்த திட்டத்தின் நோக்கத்தை பாதித்து காலத்தை வீணடிக்கச் செய்யும்  என்றும் கூறியதுடன் அவ்வாறு சட்ட ரீதியான ஆலோசனை பெறும் பட்சத்தில் அவ் ஆலோசனை சபையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேனேரம் குறித்த விடையம் சட்ட ஆலோசனை அல்லாது நேரடியாகவே சட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என உறுப்பினர் மதுசிகன் வலியுறுத்தினார். ஆனாலும் சட்ட ஆலோசனைபெற்று அடுத்த நடவடிக்க்சிக்குச் செல்ல சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.