Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து கலந்துரையாடியது.

,


 பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டடத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடா பெண் பாராளுமன்ற ஒன்றியத்துடன் கலந்துரையாடினார். 
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்துக் கலந்துரையாடும் கூட்டமொன்று ஒன்றியத்தின் தலைவர் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் 20.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பெண்களைத் தெரிவுசெய்வது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களைச் சந்திப்பது, பத்தாவது பாராளுமன்றத்தில் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் உருவாக்குவது, பாராளுமன்றத்திற்குள் பகல்நேர பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாராளுமன்ற மேம்பாட்டு செயற்றிட்டம் 2024/2027 இன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூசா கொபோடா, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடினார்.

 இத்திட்டத்தின் அடிப்படையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் விடயங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே, சமன்மலீ குணசிங்ஹ, ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர,  பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.