Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

"உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன்" - மதிமுக வைகோ பேச்சு!

.

பாஜக இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் ஒருபொழுதும் காலூன்ற முடியாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டையொட்டி நேற்று (ஜனவரி 01) புதன்கிழமை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், "புதிய ஆண்டில் புத்துணர்ச்சியுடன் மதிமுக பணிகளை செய்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான உதவியை இதுவரை செய்யவில்லை. கேட்ட நிதிகளில் 5 சதவீதம் நிதியை மட்டும் தந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்த நினைக்கிறார். அதிபர் வேட்பாளராக மாற வேண்டும் என்ற எண்ணம் மோடிக்கு உள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்றது. இந்தியாவுக்கு பேராபத்து என்றால் அது மோடி அரசால் தான் ஏற்படும்.நாடாளுமன்ற தேர்தலில் சுற்றி சுற்றி வந்த மோடிக்கு 250 இடங்கள் கிடைத்தது. ஆனால், எதிர்காலத்தில் இந்த 250 கிடைக்காது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. கூட்டணியை மேலும் வலுப்படுத்தி வெற்றி பெறச் செய்வோம். வலது தோளாகவும், இடது தோளாகவும் இருந்து திமுகவுக்கு நாங்கள் பாடுபடுவோம்.

விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கூடங்குளத்தில் மேலும், இரண்டு அணு உலைகளைக் கொண்டு வருவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாட்டை குறிவைத்து பாஜக தாக்குகிறது. நான் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன். தமிழ்நாட்டை காலனி அடிமை நாடாக டெல்லி கருதுகிறது.

பாஜக இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் ஒருபொழுதும் காலூன்ற முடியாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. அந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.