வெள்ளவத்தை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றம்.
.

முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் வெள்ளவத்தையில் இன்று (மே 18) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது ஒன்றுகூடலின் போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளை மலர்களுடன் பங்கேற்பாளர்கள் கூடியிருந்தனர்.
இதனை மற்றொரு குழு சீர்குலைக்க முயன்றதனால் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நின்ற காவல்துறையினர் , போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைக்க முற்பட்டமை தொடா்பில் காணொளி பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவு கூரலானது திடீரென ஒரு சாராரால் ஏற்படுத்தப்பட்ட போது மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டது. காரணம் இந்த தரப்பினர் எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடாதவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நடந்து கொண்டிருந்த போது அங்கு பங்கு பற்றாத, அதனோடு ஈடுபடாதவர்கள் இதனை அரசியல் லாபத்திற்காகவே செய்வதாக மக்கள் கருதுகின்றனர்.