Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

"லண்டன் செல்லத் தடை?" - இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெப்ரவரி 25-ம் திகதி முதல் இந்தப் புதிய விதிமுறை

"லண்டன் செல்லத் தடை?" - இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போர் கவனத்திற்கு!
பிரித்தானியா  (Royaume-Uni) தனது குடியேற்றக் கொள்கையில் (Politique d'immigration) மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதனால், இரட்டைக் குடியுரிமை (Binationaux) வைத்துள்ள பலர் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
வரும் பெப்ரவரி 25-ம் திகதி முதல் இந்தப் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது என்று பிரித்தானிய உள்துறை அமைச்சகம்  தெரிவி த்துள்ளது.

இதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டை  வைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குள் சென்று வந்தவர்கள், இனி அப்படிச் செய்ய முடியாது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் கண்டிப்பாகத் தங்களுடைய செல்லுபடியாகும் பிரிட்டிஷ் கடவுச்சீட்டை (Passeport britannique) எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.
அப்படி கடவுச்சீட்டு  இல்லை என்றால், "உரிமைச் சான்றிதழ்" (Certificat de droit) என்ற சிறப்பு ஆவணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

இந்தச் சான்றிதழ் பெறுவது எளிதான காரியமல்ல. கடவுச்சீட்டு இல்லாதவர்கள், இந்தச் சான்றிதழைப் பெற மிக அதிகமான தொகையை அபராதம் போலச் செலுத்த வேண்டியிருக்கும். இது சாதாரண விசா கட்டணத்தை விடப் பல மடங்கு அதிகம்.
சமீபத்தில் வெளிநாட்டினருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ETA (மின்னணு பயண அனுமதி) முறையை இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது. அவர்கள் பிரித்தானிய குடிமக்கள் என்பதால், இந்த நடை முறை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
"கடைசி நேரத்தில் எல்லையில் (Frontière) காத்துக்கிடக்க வேண்டாம்; உடனடியாக கடவுச்சீட்டு  அல்லது உரிமை சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்," என்று அரசாங்க இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்தால் விமான நிலையத்தில் அல்லது  யுரோஸ்டர்  தொடருந்து நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுவீர்கள்.