Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முல்லைத்தீவு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தல்!

.

 முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்க ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தல். 

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளருக்கும், கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில்,, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின்  பணிப்பின் பேரில் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. கோலித கமல் ஜினதாச மற்றும் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோர், மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்தனர். 

இதன்போது மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட்டன.

இதனையடுத்து  முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை தளத்திற்கு விஜயம் செய்து, சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்படை ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறும் வலியுறுத்தினர்.

பின்னர் புல்மோட்டை கடற்படைத் தளத்திற்கு சென்று அங்குள்ள கடற்கடை அதிகாரி மற்றும் கரையோரப் பாதுகாப்பு அதிகாரியுடன் கலந்துரையாடி உடன் அமுலுக்கு வரும் வகையில் முகத்துவார வாயில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. 

இச்சந்திப்புகளில் அமைச்சரின்   பிரத்தியேக செயலாளரும் பங்கேற்றிருந்தார்.