Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கறுப்பு ஜூலை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

1983இல் வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கொழும்பில் பலர் கொல்லப்பட்டனர்.

கறுப்பு ஜூலை வரலாற்றை மறைக்க முயலாமல் அதனை சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
1983இல் வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கொழும்பில் பலர் கொல்லப்பட்டனர். 
இராணுவ மற்றும் பொலிஸாரின் தலைமையில் அரச உதவிப் பின்னணியில் தமிழ்க் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டன. 
அது மறக்க முடியாத சம்பவங்கள். சிங்களவர்களிடையே இருந்த நல்லவர்கள் தமிழர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தனர். அந்தச் சம்பவங்கள் இடம்பெற்ற நாளையே தமிழர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
எனினும், இன்னும் இதனைச் சகலரும் அனுஷ்டிக்கும் பொதுவான நாளாக அறிவிக்க முடியவில்லை. அதேபோன்று, இதுவரையில் இன்னும் எந்த அரசும் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக்கோரவும் இல்லை.  
ஜே.வி.பியும் இதில் குற்றவாளியே. கறுப்பு ஜூலையை வரலாற்றிலிருந்து மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அதனை மறைக்க முடியாது. 
ஏன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டியேற்பட்டது என்பதைப் பாருங்கள். அதனைப் பயங்கரவாதம் என்று கூற முடியாது. அவ்வாறு நான் கூறமாட்டேன். பாதுகாப்புக்காக மக்கள் அதனைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள்தான் பயங்கரவாதம் போன்று செயற்பட்டீர்கள்.  என்றார்.