Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் ஏனைய பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவி கைது!

9 வீடுகளில் பகல் நேரத்தில் வீடுகளுக்குள் சென்று திருடிய நிலையில் திருடப்பட்ட பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் ஏனைய பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவி கைது!
கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  புத்திக குணசேகர அவர்களின் வழிகாட்டலில்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மன  அவர்களின் ஆலோசனைக்கு  அமைய  கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர்  பஸ்நாயக்க அவரின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் 79718 இலக்கமுடைய ஏக்கநாயக்க, அவர்களின் தகவலின் படி விநாயகபுரம் பகுதியில் வைத்து 24வயதான கணவனும்  20வயதான மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி உதயநகர் ,அம்பாள் குளம் ,விநாயகபுரம், சாந்தபுரம் கனகாம்பிகைக்குளம் பகுதிகளில்  09வீடுகளில் பகல் நேரத்தில் வீடுகளுக்குள் சென்று திருடிய நிலையில் திருடப்பட்ட பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.10பவுணுக்கு மேற்பட்ட நகைகள் மற்றும் ஏனைய பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.