Breaking News
தமிழரின் கலாச்சார நகரான யாழ்ப்பாணம் வந்த சிங்கள இனவாத அரசின் பிரதமர்.
.

தமிழரின் கலாச்சார நகரான யாழ்ப்பாணம் வந்த சிங்கள இனவாத அரசின் பிரதமர்
ஹ ரி ணி அவர்கள் அணிந்துவந்த உடை தமிழர்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மூவின மக்களின் பிரதமராக தன்னை அடையாளப்படுத்தி பிரச்சாரம் செய்யும் ஹரிணி அவர்கள் தமிழினத்தின் கலாச்சாரத்தை சிறிதளவும் மதிக்காது யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்குச் சென்று
மாணவர்களுக்கு போதித்தது ஆடுகளுக்கு ஓநாய் வேதம் ஓதுவதுபோலவே இருந்துள்ளது.
1974 ஒக்ரோபரில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு வந்த அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட இவ்வாறு உடையணிந்து வருகை தரவில்லை.
பாடசாலை நிகழ்வுகளுக்குச் செல்வதென்று தெரிந்தும் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக சந்தைக்கு போவதுபோன்று உடையணிந்துவந்த ஹரிணி அவர்களின் செயற்பாடு அருவருக்கத்தக்கதாக அமைந்துள்ளதென யாழ் கலாச்சார பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹரிணி அவர்களை வரவேற்க பண்பாட்டு வாத்தியங்களுடன் நின்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள்,ஆசிரியர்கள் பண்பாட்டு உடையுடுத்தி ஹரிணி அவர்களை வரவேற்று பொட்டுவைத்து பொன்னாடை போர்த்தி நாகரிகமாக நடந்துகொண்டபோதும் ஹரிணி அவர்கள் தமிழரின் கலாச்சாரத்தை மதிக்கத் தவறியதற்காக மனம்வருந்தி தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.