Breaking News
லெபனானில் ஹெஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 275 பேர் பலி ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயம்.
.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 275 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என லெபனான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 21 சிறுவர்கள் உள்ளனர் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டயர் நகரம் உட்பட தென்லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து விமானதாக்குதலை மேற்கொள்கின்றது மக்கள் அங்கிருந்து தப்பியோடுகின்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை தென்லெபானிலும் பெக்கா பிராந்தியத்திலும் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் 800 இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.