பலதும் பத்தும் :- 03,03,2025 - உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு திகதி நிர்ணயம்.
இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் - ஜெலென்ஸ்கி சந்திப்பு.

தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு வௌிநாட்டுபயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை - பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில்நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவரை கைது செய்யுமாறு மாத்தறைநீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(28) உத்தரவிட்டது. முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி என்ஸ்லம் டிசில்வா உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது. கொலைக்காக சதி செய்த குற்றச்சாட்டின் கீழ் அவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுவை மற்றும் அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு!
எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா இன்று (03) காலைகடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக எழுவைதீவு, அனலைதீவுகடற்பரப்பில் பயணித்த படகு ஒன்றினை சோதனையிட்ட பொழுது 197 கிலோ கிராம் 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. தொடர்ந்து காரைநகர் மற்றும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் சான்று பொருட்களையும் ஊர்காவற்துறை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. இதன்போது அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்புதொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரசாங்க அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குள் இவை திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளைஎடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
"6 ஆம் திகதிக்குள் இந்தத் திருத்தத்தைச் செய்யுங்கள், 7 ஆம் திகதியிலிருந்து நாம் கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். 7 ஆம் திகதிக்குப் பிறகு, சுகாதார சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அரசாங்கம் மீண்டும்ஒருமுறை சிந்திக்க வேண்டியிருக்கும்." என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு திகதி நிர்ணயம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள்ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் - ஜெலென்ஸ்கி சந்திப்பு.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸைசந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்குஉக்ரைன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததாக வோலோடிமிர்ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.