Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவே குற்றங்கள் அதிகரிக்க காரணம்! எழுந்த குற்றச்சாட்டு

பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிக்காமல் மறைந்துள்ளார்.

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித  பொறுப்புக்கூறலுமின்றி, சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந்நிலைமைக்குக் காரணம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக தனது கருத்தினை வெளிப்படுத்துகையிலேயே தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

இன்று நாட்டின் நீதிமன்றத்தின் உள்ளே படுகொலை நடக்கிறது. வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியர் அரச  வளாகத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேர்கிறது. சாதாரணமான துப்பாக்கிப் பிரயோகங்கள் எங்கும் நடக்கின்றன. இவற்றுக்குப் பின் முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர். 

நாட்டின் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிக்காமல் மறைந்துள்ளார். 

இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொலிஸ் தரப்பின் தொழில்சார் ஒழுக்கத்தை பகிரங்கப்படுத்தி நிற்கின்றன. படைகளின் தொழில்முகப்படுத்தலில் ஒழுக்கம் இன்மைகளை வெளிக்காட்டுகின்றன. 

பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஜனாதிபதிகள், பொதுமன்னிப்பு அதிகாரத்தினை பயன்படுத்திக் கூட தமிழ் மக்களை மிலேச்சத்தனமாக கொலை செய்த படைத்தரப்பினரை குற்றத்துக்கான தண்டனையில் இருந்து பாதுகாத்துள்ளனர்.

இவ்வாறான மனித நாகரிகமற்ற சட்டத்துக்கும் நீதிக்கும் ஏற்புடையதல்லாத கலாசாரம் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் வெற்றியாக அரசும் மாறி மாறி ஆட்சியேறிய அரசாங்கங்களும் கட்டிவளர்த்த கலாசாரம் தான் இன்று நாடே குற்றங்களுக்குள் மூழ்கக் காரணமாக உள்ளன.

இந்நிலையில் மக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.என தெரிவித்தார்.