Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மட்டக்களப்பு நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல்!

.

சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) மட்டக்களப்பின் பல பகுதிகளிலும்  இடம்பெற்றது.

இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட கிராமம் என்ற நிலையில் உள்ள மட்டக்களப்பு நாவலடி சுனாமி தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகள் நடைபெற்றதுடன் உயிர்நீர்த்த உறவுகளினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாவலடி கடற்கரையில் ஆத்மசாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்று தமது உறவுகளின் ஆதம்சாந்திக்கான வழிபாடுகளும் கிரியைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப்மேரி,க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன்,இரா.துரைரெட்னம், முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வூர்வுமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1,100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.