இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து விளக்கமளிப்பு!
.
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை பின்வருமாறு...
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து.
குறித்த விடயம் தொடர்பாக.
இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.
எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
S. S. முதலிகே
புகையிரத பொது முகாமையாளர்