Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வைத்தியர் அர்ச்சுனாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு..!

.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தமைமையிலான சுயேட்சைக் குழுவினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு இளைஞர்கள்  சிலர் தமது எதிர்ப்பை தெரித்த சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  தற்போது மும்முரமாக தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் நேற்றையதினம்(08) ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சில இளைஞர்களே இதன்போது எதிர்ப்பை வெளியிட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது முன்னின்று உதவியவர்களைப் புறந்தள்ளி வைத்தியர் அர்ச்சுனா புதியவர்களை இணைத்துள்ளமையையும், அவரது செயற்பாடுகளையும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் இதன்போது கண்டித்தனர்.

இதேவேளை அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.