Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தம்புள்ளையில் பதற்றத்தை ஏற்படுத்திய மாம்பழம்- கடும் வாக்குவாதத்தில் வியாபாரிகள்!

.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளுக்கும்  இடையில் இன்று (21) கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினுள் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த முறையை புறக்கணிக்கும் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும், கடைகளை தற்காலிகமாக மூடவும் பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.

எனினும், தற்காலிகமாக கடைகளை மூடுவதற்கு எடுத்த தீர்மானித்தால், காலையில் மாம்பழம் விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாம்பழம் விற்பனை செய்ய வரும் வியாபாரிகள், மிகுந்த சிரமப்பட்டு கொண்டு வரும் மாம்பழங்களை விற்பனை செய்ய இடமில்லாததால், லொறிகளிலும், கடைகளுக்கு அருகில் தரையிலும் மாம்பழங்களை விற்பனை செய்வதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு இடத்திலும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதால், ஏனைய விவசாயிகளும், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருபவர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த மாம்பழ விற்பனை முறையால் பொருளாதார மத்திய நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இன்று ஏற்பட்ட இந்த பதற்ற நிலையால் பொருளாதார நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தன.