Breaking News
14 ஆம் திகதி சீனா செல்லும் ஜனாதிபதி
.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் சீன விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.