STR51 படத்தோட பேரு பங்கமா இருக்கும்.. பிரபலம் சொன்ன தகவல்!
.

கடந்த 2020ம் ஆண்டில் வெளியான ஓ மை கடவுளே படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நேற்றைய தினம் டிராகன் படம் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிம்பு பிறந்தநாளில் வெளியானது. இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் சிம்பு நடிக்கவுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது டிராகன் படம் கொடுத்துள்ள அதிரிபுதிரி வெற்றியும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
டிராகன் படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிராகன் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். கோமாளி, லவ் டுடே என்ற படங்களின்மூலம் இயக்குநராக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. கல்லூரி மாணவராக மிக இயல்பான நடிப்பை கொடுத்து அவர் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
STR51 படத்தை இயக்கும் அஷ்வத்: இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. நடிகர் சிம்புவின் எஸ்டிஆர்51 படத்தை இயக்க அவர் கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று தெரிகிறது. பேன்டசி என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இதில் God of Love என்ற கேரக்டரில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிம்பு நிஜமான காதல் கடவுள்: இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சிம்பு படத்தில் நிஜமான காதல் கடவுளாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். படத்தின் கதைக்களம் தனது முந்தைய படங்களான ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். படத்தில் சிம்பு மன்மதன் அல்ல, ஆனால் மன்மதனாக நடிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் கதைக்களம் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் படத்தின் டைட்டில் குறித்து பேசியுள்ளார்.
STR51 டைட்டில் குறித்து பேசிய எடிட்டர்: படத்தின் டைட்டில் காட் ஆஃப் லவ் கிடையாது என்றும் அது சிம்புவின் கேரக்டர் என்றும் குறிப்பிட்டுள்ள பிரதீப் ராகவ், படத்திற்கு பங்கமான தலைப்பை படக்குழுவினர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக பிரதீப் ராகவன் எடிட்டிங்கில் வெளியான லவ் டுடே, ஸ்டார் மற்றும் டிராகன் படங்களின் ட்ரெயிலர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல டிராகன் படத்திற்கும் இரண்டு டிரெயிலர்களை தான் வைத்திருந்ததாகவும் 4 மணிநேரத்திற்கு முன்னதாகத்தான் இந்த ட்ரெயிலரை இயக்குநர் இறுதி செய்ததாகவும் கூறியுள்ளார்.
ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க வேண்டும்: ஒரு படத்திற்கு ஹைப்பை உருவாக்கும்வகையில் தான் ஒவ்வொரு ட்ரெயிலரையும் உருவாக்குவதாகவும் அதன்பின்பு படக்குழுவினர் சொல்லும் மாறுதல்களை அதில் ஏற்படுத்துவதாகவும் பிரதீப் ராகவன் குறிப்பிட்டுள்ளார். தற்காலங்களில் ரசிகர்களை அதிகமாக திரையரங்குகளில் கொண்டு சேர்க்க இத்தகைய முயற்சிகளை தான் உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். டிராகன் படத்திற்கும் 3 நிமிடங்களுக்கு இதுபோன்ற டிரெயிலரை உருவாக்கியதாகவும் தொடர்ந்து சில மாற்றங்களுக்கு பின்பு ட்ரெயிலர் வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.