Breaking News
வட்டுக் கோட்டைத் தொகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு!
.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று May 18 மாலை 5.00 மணிக்கு நினைவு வணக்கமும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் வட்டுக் கோட்டைத் தொகுதியில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதியின் மேனாள் உபதலைவரும் மேனாள் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினருமாகிய த.சசிதரன் தலைமையில் வட்டுக்கோட்டை தெற்கு அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது, கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலித்தனர்.