Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சோமரத்னாவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்!

தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்றது செம்மணி மனிதப் புதை குழி !

 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதை குழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ச சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
 
ஏற்கனவே அவர் செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடல்கள்வரை  புதைக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது. 
அவரின் மனைவி, செம்ணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன்.
 
எம்மை பொறுத்தவரையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி. குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார். 
ஆகவே அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.