14 வயதான சிறுவனை ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த ஒருவர் கைது மற்றுமொருவர் தலைமறைவு!
மருதனார்மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அடித்து சித்தரவதை.
யாழில் அண்ணனை பழிவாங்க 14 வயதான தம்பியை ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த ஒருவர் கைது மற்றுமொருவர் தலைமறைவு!
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை பழிவாங்குவதற்காக , இளைஞனின் தம்பியான 14 வயதான சிறுவனை கடத்தி சென்ற ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளார்.
மருதனார்மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞனின் 14 வயதான தம்பியை இருவர் கடத்தி சென்று , இரகசிய இடமொன்றில் அடைத்து வைத்து , சிறுவனை நிர்வாணப்படுத்தி , அடித்து சித்தரவதை புரிந்து , அதனை வீடியோவாக எடுத்து , அந்த வீடியோவை சிறுவனின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ள நிலையில் , மற்றையவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


