Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

.

முல்லைத்தீவு மாவட்டம்  மாங்குளம்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு  மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த  தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள    கிணற்றிலிருந்தே  சடலமாக  இன்று வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர்

தாய் உசாகரன் மாலினி( வயது 38)   மகள்களான  உசாகரன் மிக்சா ( வயது 11)   உசாகரன் சதுசா (வயது 04) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த  கிணற்றின் அருகில்  இன்று அதிகாலை கைப்பை ஒன்றும்  ஏனைய  பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊா் மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும்  காவல்துறையினருக்கு   வழங்கிய தகவல்களின்  அடிப்படையில் அங்கு  சென்ற    கிராம அலுவலர் மற்றும்  காவல்துறையினர் கிணற்றில் சடலங்கள் இருப்பதை   பாா்வையிட்டதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள்   மீட்கப்பட்டு  மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று  பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்

இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது  கொல்லப்பட்டனரா என்பது தொடர்பில்  மாங்குளம்  காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்