நிறம் மாறும் சீன இந்திய உறவு! விரிசல்கள் ஒட்டப்படுகிறதா?, வியாபார தந்திரமா?.
.
இந்தியா மற்றும் சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியிலான தாக்குதல் நடந்தது முதல் இரு நாடுகள் இடையேயான பதற்றமான உறவுகளுக்கு இந்தியா மற்றும் சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியிலான தாக்குதல் நடந்தது முதல் இரு நாடுகள் இடையேயான பதற்றமான உறவுகளுக்குப் பிறகு, தற்போது நிலைமை மாறி வருவதாகத் தெரிகிறது. லடாக் எல்லையில் இராணுவ இருப்பைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து முக்கியமான மாற்றம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் முதல் அறிகுறி தான் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் புதிய செயல்பாடுகள்.
இந்திய சந்தையில் செயல்படும் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போது பிராண்ட் விளம்பரம், வலுவான டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்கை உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் தங்கள் உற்பத்தி திறன்களை மேலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மீண்டும் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு சீன முதலீடுகளுக்கு மீண்டும் கதவை திறக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே நாட்டில் பணவீக்கம் மோசமாக இருக்கும் நிலையில், வட்டி விகித்தை குறைக்க முடியாது என தனது நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ தெரிவித்துவிட்ட நிலையில், மத்திய அரசு சீன முதலீடுகளுக்கு கதவைத் திறப்பது மூலம் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறதா என் கேள்வியும் எழுகிறது. அணுகுமுறையில் பெரும் மாற்றம்: சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய வர்த்தகத்தில் மிகவும் கவனமாகச் செயல்படுவது மட்டும் அல்லாமல் அதன் வர்த்தகத்தையும், முதலீட்டையும் பெரிய அளவிலான கட்டுப்பாட்டில் நகரத்து வருகிறது. தற்போது இந்த அணுகுமுறையில் பெரும் மாற்றம் நடந்திருப்பதை இருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
சீன நிறுவனங்களுக்கு 360 டிகிரி நெக்கடி: 2020க்குப் பிந்தைய காலகட்டம் இந்தியாவில் உள்ள சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கணிசமான சவால்களை முன்வைத்தது. நிதி முறைகேடுகள், பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இந்திய அமைப்புகள் அதிரடியான சோதனை, வங்கி கணக்கு முடக்கம் என பல கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இந்த சோதனைகளும், விசாரணைகளும் மத்தியில் மத்திய அரசு அமைப்புகள் புதிய முதலீடுகளில் கட்டுப்பாடுகள், சொத்து பறிமுதல் மற்றும் உயர் மட்ட மேலாளர்களின் கைது போன்றவையும் நடந்தது. இதனால் சீன நிறுவனங்கள் இந்தியாவில் தனது செயல்பாட்டை சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொத்தமாக முடக்கியது.
சீன பிராண்டுகள் ஆட்டம் ஆரம்பம்: ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது, இப்புதிய நம்பிக்கையின் எதிரொலியாக OnePlus, Xiaomi, Vivo மற்றும் Oppo போன்ற நிறுவனங்கள் தனது மார்க்கெட்டிங் தளத்தை மீண்டும் வளர்த்து வருகிறது. இந்த நிறுவனங்கள் மீண்டும் மார்கெட்டிங், விளம்பரம், இந்திய பிராண்ட் தூதுவர்களை நியமித்தல், உள்ளிட்டவற்றுக்கு நிதியை ஒதுக்கத் துவங்கியுள்ளது.
டார்கெட் இந்தியா: இந்த 2.0 சுற்றில் சீன பிராண்டுகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பெரிய பங்கைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளது, இதனால் ஆப்பிள், சாம்சங் போன்றவற்றின் வர்த்தகம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளலாம் என தெரிகிறது.
சிறப்பு சுற்றுலா: இப்புதிய முயற்சிகளின் ஒருபகுதியாக OnePlus மற்றும் Xiaomi இரண்டும் சீனாவில் ஷென்ஜென் மற்றும் பெய்ஜிங்கில் இருக்கும் தங்களுடைய தொழிற்சாலைக்கு இந்தியாவில் இகுக்கும் ரிவ்யூவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் குழுக்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று இந்தியாவில் தனது திட்டத்தைக் குறித்து விவரித்துள்ளது.
சியோமி: Xiaomi-யின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி அனுஜ் சர்மா, லடாக்கில் இந்தியா-சீன எல்லையில் இராணுவ இருப்பைக் குறைப்பதன் காரணமாகச் சாதகமான நிலை இந்தியாவில் எங்களுக்கு உருவாகியுள்ளதாக ஒப்புக்கொண்டார். இந்த பதற்றம் குறைவது இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு நிலையான மற்றும் சாதகமான வணிக சூழலை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.
ஓன்பிளஸ்: OnePlus இந்தியாவில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்த ரூ.6,000 கோடி குறிப்பிடத்தக்க முதலீட்டை அறிவித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டின் இந்தியா - சீனா எல்லை பதற்றம் அதிகரித்ததில் இருந்து இந்தியாவில் ஓன்பிளஸ் பிராண்டால் செய்யப்பட்ட முதல் முதலீட்டு அறிவிப்பாகும்.
வீவோ: Vivo இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை விரிவுபடுத்த, கிரேட்டர் நொய்டாவில் புதிய 170 ஏக்கர் உற்பத்தி வசதியைத் திறந்துள்ளது. இந்த பேக்டரியில் ஆண்டுக்கு 120 மில்லியன் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.