இயக்குநரும் தயாரிப்பாளருமான "மாமனிதர் "நவரத்தினம் கேசவராஜன்.
.
"மாமனிதர் "நவரத்தினம் கேசவராஜன் அவர்கள் .பிறப்பு (19 ஐப்பசி 1962 ) இறப்பு( 9 தை 2021) ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். 1986-ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கினார். ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்டவர். பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடலோரக் காற்று, அம்மா நலமா, பனைமரக் காடு எனப்பல முழுநீளத் திரைப்படங்களையும், அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களையும் உருவாக்கியுள்ளார். சிங்களத் திரைப்படத்துறையிலும் ஆர்வமுள்ள ஒரு படைப்பாளராக, வடக்கையும் தெற்கையும் இணைத்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்றும் அறியப்பட்டவர்.பிரசன்னா விதானகே, அசோகா அந்தகம, விமுக்தி ஜெயசுந்தரா ஆகியோர் இயக்கிய மூன்று பாகத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.