கெனிஷா பிரான்சிஸ். ஆரம்பத்தில் அவர் குரலுக்கு அடிமையான ரவி இப்போது அவருக்கே அடிமையாகி விட்டார். ஆதாரத்துடன் சிக்கிய காதலி
.
ஆதாரத்துடன் சிக்கிய காதலி!
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். தமிழ் சினிமா நடிகர்களுக்கு சமீப காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிள் ஒரு அறிவிப்பில் தங்களுடைய திருமண வாழ்க்கையை முறித்து கொள்கிறார்கள். ஆனால் ரவி வாழ்க்கையில் இது ரொம்பவே வித்தியாசமாக நடந்தது. ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட, அவருடைய மனைவி இது தன்னுடன் ஆலோசிக்காமல் ரவி கொடுத்த அறிவிப்பு எனவும் தனக்கு இது துளியும் விருப்பம் இல்லை என்பது போலவும் சொல்லியிருக்கிறார்.
வழக்கமாக இது போன்ற விவாகரத்து பிரச்சனைகள் வரும்போது பெரும்பாலும் நடிகர்களின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தான் செய்திகள் வெளியாகும். ஆனால் ஜெயம் ரவியின் விஷயத்தில் மொத்தமாக எல்லா குற்றச்சாட்டும் ஆர்த்தியின் மீது திரும்பியது.
ஆர்த்தி ஜெயம் ரவியை சந்தேகப்படுகிறார், ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அவருடைய மாமியாரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளியானது. தற்போது இந்த விவாகரத்தில் உண்மை காரணத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது.
அந்த பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில் கடந்த ஜூன் மாதம் வரை ஆர்த்தி மற்றும் ரவி இருவருக்கும் நடுவில் எந்த விரிசலும் இல்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஜெயம் ரவிக்கு சினிமா தாண்டி சில நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் வருடம் தோறும் கோவா ட்ரிப் செல்வதை வழக்கம் வைத்திருக்கிறார். கோவாவில் ஒரு பப்பில் பாடகியாக இருப்பவர் தான் கெனிஷா பிரான்சிஸ். ஆரம்பத்தில் அவர் குரலுக்கு அடிமையான ரவி இப்போது அவருக்கே அடிமையாகி விட்டார்.
ஆதாரத்துடன் சிக்கிய காதலி கெனிஷா பிரான்சிஸ்
காருக்குள் இருப்பது வெளியில் தெரியாமல் இருக்க கிளாஸ்களில் ஓட்டும் ஷீட்டுகளின் அளவு அனுமதித்த அளவை விட அதிகமாக இருந்த காரணத்தினால் ஜெனிஷா ஒரு முறை அபராதம் கட்டியிருக்கிறார். அந்த பில்லில் கார் ஜெயம் ரவி பெயரில் ரெஜிஸ்டர் ஆகி இருப்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதே காரை அதிவேகமாக ஓட்டி ஜெயம் ரவி கோவாவில் ஒரு முறை அபராதம் காட்டியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் கெனிஷாவின் போன் நம்பரை True caller-ல் செக் பண்ணிய போது கெனிஷா ரவி என்று வந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் தன்னுடைய திருமணநாள் அன்று கூட சூட்டிங் இருக்கிறது என்று சொல்லி ரவி வெளியே கிளம்பி இருக்கிறார்.
அதன் பின்னர் தான் அன்றைய நாளில் சூட்டிங் இல்லை என்பது ஆர்த்திக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் தான் ஆர்த்தி ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கியிருக்கிறார். இருந்தாலும் ஆர்த்திக்கு ரவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருக்கிறது.