நொய்டா நாட்டில் குளிர் காலம் நெருங்கி யுள்ளதாலும், ஹரியா னா, பஞ்சாப் உள்ளிட்ட மாநி லங்களில் உள்ள கோதுமை பயிர்க ளின் கழிவுகளை எரிப்பதாலும் தேசிய தலைநகர் தில்லியில் காற்று மாசுபாடு மீண்டும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நில வரப்படி தில்லியில் பெரும்பாலான பகுதியில் காற்றின் தரம் 350 புள்ளி களாக குறைந்துள்ளது. இதனால் தில்லி மக்கள் மூச்சு விட முடியாமல் தவித்து வருகின்றனர். தில்லியைப் போலவே உத்த ரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களான கிரேட்டர் நொய்டா, நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய நகரங்களிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. கிரேட்டர் நொய்டா, நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் 160 புள்ளிகளை தாண்டியுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிர தேசத்தில் காற்றின் தரம் குறைந்த தற்கு பாகிஸ்தான் தான் காரணம் என அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி டி.கே.குப்தா கூறி யுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”பாகிஸ்தான் நாட்டில் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகளை எரிப்பதால் உத்தரப்பிர தேச மாநிலத்தில் காற்று மாசு ஏற் பட்டுள்ளது. இதன் காரணமாகவே நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய மூன்று நகரங்களிலும் ஒரே நாளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பது முதல் முறையாகும். இதற்கு காரணம் நமது அண்டை நாடான பாகிஸ்தான் தான்” என அவர் கூறியுள்ளார். உளறும் டி.கே.குப்தா ஒவ்வொரு ஆண்டும் தில்லி காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு கிறது. தில்லி காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் நொய்டா, கிரேட்டர் நொய்டா உள்ளிட் டப் பகுதிகளிலும் ஒரே நாளில் காற்றின் தரத்தை இழப்பது வாடிக்கை யாக உள்ளது. இது கடந்த 6 ஆண்டு களாக (கொரோனா காலகட்டத்தை தவிர்த்து) நிகழ்ந்து வருகிறது. ஆனால் தற்போது தான் நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியா பாத்தில் ஒரே நாளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாகவும், இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதி காரி உளறியுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.
Breaking News
தில்லி மக்கள் மூச்சு விட முடியாமல் தவித்து வருகின்றனர் ! காற்று மாசுபாடு மீண்டும் அதிகரித்து வருகிறது.
.