Breaking News
தாங்கள் ஒரு திறந்தவெளிச்சிறையில்தான் வாழுகிறோம் என்ற எந்த சிந்தனையும் இல்லாமலே இந்த 2K Kids வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
மடை மாறி போய்க்கொண்டு இருக்கும் இந்த இளைஞர், யுவதிகளை ஓரளவேனும் சிந்திக்க வைக்கமுடியும். இவ்வளவும் நடந்த மண்ணிலா நாங்கள் இந்த நாகரீகமற்ற வாழ்க்கை வாழுகிறோம் என்று சிந்திக்க வைக்கவேண்டும்.

எனது ஈழப்போர் சார்ந்த பதிவுகள் சிலருக்கு எரிச்சலை கிளப்பலாம் அல்லது இப்படி எல்லாம் நடக்கவில்லை என்று வாதிடலாம்.
அப்படி வாதிட வருபவர்கள் உண்மையில் களத்தில் நின்றவர்கள் அல்ல. களத்துக்கு வெளியே நின்று புதினம் பார்த்தவர்கள். தங்களை இயக்கம் என்று சொல்லி கலர் காட்டியவர்களே. அவர்களைப்பற்றி அலட்டத்தேவையில்லை.
உண்மையில் இனிமேல் மறைத்து பேசுவதற்கு எதுவும் இல்லை. இருந்தாலும் பல இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போராளிகள், முகவர்கள் இன்றுவரை எதுவும் தெரியாதவர்களாக தாம் தம் வாழ்வும் என்று இருக்கிறார்கள்.
அவர்களை இனம் காட்டாமல் இனி வரும் பதிவுகளில் அவர்களின் சாதனைகளை பேசவேண்டும். 2K Kids என்று சொல்லும் பல இளைஞர்கள் திசைமாறி எப்படி தீய வழிகளில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பிரதான காரணம் இலங்கை படை புலனாய்வாளர்கள், அடுத்ததாக இந்திய உளவுப்பிரிவுகள்.
தற்காலத்து இளைஞர்களை இன்னுமொரு விடுதலைப்பயணத்தை நோக்கி சிறிதளவேனும் சிந்திக்காமல் மடை மாற்றிவிட்டுள்ளார்கள்.
இந்த இளைஞர் யுவதிகளை இன விடுதலை பற்றி சிந்திக்க வைக்க வேண்டிய பொறுப்பு வெளிநாடுகளில், உள்நாடுகளில் வாழும் ஒவ்வொரு முன்னை நாள் போராளிகளைச்சாரும்.
இலங்கையில் அல்லது ஈழப்பரப்பில் இருந்து இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லலாம். உண்மையும் கூட. பல முன்னை நாள் போராளிகள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
எல்லோரும் இல்லை சில முன்னை நாள் போராளிகள் இராணுவ உழவுப்பிரிவுக்காக ஊதிய அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அவர்கள் உடனடியாக இராணுவம் மற்றும் பொலிசாருக்கு போட்டு கொடுத்துவிடுவார்கள்.
வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகள் சமூக ஊடகங்களில் தினமும் போர்க்களங்கள், தாங்கள் கண்ட அனுபவங்கள், வேவு நடவடிக்கைகள், தோல்வியில் முடிந்த தாக்குதல்கள், அதற்கான காரணங்கள் இவற்றை எல்லாம் வெளிக்கொண்டுவரவேண்டும்.
மடை மாறி போய்க்கொண்டு இருக்கும் இந்த இளைஞர், யுவதிகளை ஓரளவேனும் சிந்திக்க வைக்கமுடியும். இவ்வளவும் நடந்த மண்ணிலா நாங்கள் இந்த நாகரீகமற்ற வாழ்க்கை வாழுகிறோம் என்று சிந்திக்க வைக்கவேண்டும்.
தாங்கள் ஒரு திறந்தவெளிச்சிறையில்தான் வாழுகிறோம் என்ற எந்த சிந்தனையும் இல்லாமலே இந்த 2K Kids வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
தினமும் இந்திய பாடகர்களை மற்றும் சினிமாத்துறை சார்ந்தவர்களை வரவழைத்து நிகழ்ச்சி, பிரியாணிகடைகள், பீட்சா கடைகள் பந்தா வாழ்க்கை
தினம் ஒரு காதல் இதனால் பதின்ம வயது குற்றங்கள் போதைக்கு அடிமை, அந்த போதைப்பொருளை வாங்க பணத்துக்காக களவு, கொள்ளை, கொலை இப்படி இப்படி ஏராளம்.
இன்றை இந்த இளைஞர் யுவதிகளின் பலம் என்ன பலவீனம் என்ன என்று உணர்ந்த வியாபாரிகள் தங்கள் வியாபார வலையை கனகச்சிதமாக விரித்து விஸாபித்துள்ளார்கள்.
இவ்வளவும் கதைக்கும் நீ எங்கிருந்து எழுதுகிறாய் என்று கேட்பவர்களுக்கு நான் எங்கும் போகவில்லை உங்களோடு ஒருவராகவே இருக்கிறேன். எனது சொந்த முகம் எங்கே என்று கேட்டால்,எனது பதில் முகத்தை காட்டினால் அடுத்த கணமே பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்படுவேன்.
அதனால்தான் சொல்கிறேன் முன்னைநாள் போராளிகள் முகத்தை மறைத்து எழுதமுடியுமென்று.
"ஊர் குருவி" நாடற்ற நாடோடி தாய்த் திருநாட்டை தரிசிப்பதற்காக அயராது உழைக்கும் சமூகப்போராளி.