மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்களுக்கான பயிற்சி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் ஆரம்பம் !
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவுகளை நிறுவுவதற்கான சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தீர்மானம்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவர்களுக்கான பயிற்சி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் ஆரம்பம்
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு எதிர்காலக் கல்விசார் நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி, (15) களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவுகளை நிறுவுவதற்கான சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் இதுவரை மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவப் பிரிவு, சிறுவர் மருத்துவப் பேராசிரியர் பிரிவு, மனநலப் பேராசிரியர் பிரிவு, உடல்நோயியல் பேராசிரியர் பிரிவு, சத்திர சிகிச்சை மருத்துவ பேராசிரியர் பிரிவு என்பவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்குத் தேவையான ஐந்து பேராசிரியர் பிரிவுகள் களுத்துறை போதனா வைத்தியசாலையின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளன, மேலும் அதற்குத் தேவையான பிற மனித மற்றும் பௌதீக வளங்களும் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. பேராசிரியர் பிரிவுகளில் இருபத்தி இரண்டு மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் 2020 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன் தற்போது 5 மாணவர் குழுக்களாக 500 இற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் இறுதி ஆண்டுக் கல்வியில் ஈடுபடும் நூறு மருத்துவ மாணவர்களுக்குத் தேவையான பேராசிரியர் பயிற்சி இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவுகளை நிறுவுவதற்கு வழங்கிய பங்களிப்புக்காக அனைத்து சுகாதாரத் தொழில் துறையினரையும் கௌரவித்து விருதுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ விழாவைத் தொடர்ந்து, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் பேராசிரியர் பிரிவு, சிறுவர் மருத்துவப் பேராசிரியர் பிரிவு, மனநலப் பேராசிரியர் பிரிவு, உடல்நோயியல் பேராசிரியர் பிரிவு, சத்திர சிகிச்சை மருத்துவ பேராசிரியர் பிரிவு ஆகியவற்றை சிறப்பு பார்வையிட்டேன்.
இந்நிகழ்வில், கல்வி மற்றும் உயர் கல்வி பிரதியமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார, மொரட்டுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.டி. குணவர்தன, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் பேராசிரியர் டி.பி. சந்திரசேகர, மொரட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சேனக பிலபிடிய, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் மதுபாஷினி கருணாரத்ன, பிரதிப் பணிப்பாளர் டாக்டர் நயனஜித் கொமசாரு, களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நவீன் டி சொய்சா, விசேட மருத்துவர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட அனைத்து சுகாதாரத் தொழில்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களும் கலந்துகொண்டனர்.