மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி மட்பாண்ட தொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட உதவி நிதி துளிர் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது!
சேவகம் நிறுவனத்தின் ஊடாக பிரான்ஸ் துளிர் அமைப்பின் நிதி உதவியில் மட்பாண்ட கைத்தொழில் செய்துவருபவர்களுக்கான கடனுதவி,

மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி மட்பாண்ட தொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட உதவி நிதி துளிர் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது!
மட்டக்களப்பு செங்கலடி ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் மட்பாண்ட கைத்தொழில் செய்துவருபவர்களுக்கான இரண்டாம் கட்ட கடனுதவியை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் வழங்கி வைத்தார்.
சேவகம் நிறுவனத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 30 மட்பாண்ட தொழிலாளர்களுக்காளில் 15 பேருக்கான வட்டி இல்லா கடனுதவிகள் ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 15 பேருக்கான உதவிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
சேவகம் நிறுவனத்தின் ஊடாக பிரான்ஸ் துளிர் அமைப்பின் நிதி உதவியில் ஒருவருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் (15000/-) வீதம் 15 பேருக்குமான இரண்டு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்(225000/-) கடனுதவியாக வழங்கி வைக்கப்பட்டன.
சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மேற்படி உதவிகளை வழங்கி வைத்ததோடு. இன் நிகழ்வில் சேவகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் த.தர்சன், பொருளாளர் கு.சுபோஜன், உறுப்பினர் அ.ஜெயராஜ், வர்த்தகரும் சமுகசேவகருமான உமா சேகரன் மற்றும் நாகபூசணி அம்மன் ஆலய செயலாளர் சுதர்சன் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.