Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து களவு,கொழும்பில் அதிசொகுசு வீடு!

.

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் , புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி , கொழும்பில் தங்கி வசித்து வந்துள்ளார்.

அந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு கால பகுதி முதல் , கொழும்பில் இருந்து தனது மனைவியுடன் சொகுசு காரில் யாழ்ப்பாணம் வந்து , விடுதிகளில் தங்கி நின்று பகல் வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று வீடுகளை நோட்டமிட்ட பின்னர் , ஓரிரு வீடுகளை இலக்கு வைத்து , மாலை வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று, இலக்கு வைத்த வீட்டிற்கு அண்மித்த பகுதிகளில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை களவாடிய பின்னர் , அதிகாலை 1 மணிக்கும் – 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் , சென்று வீட்டில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு கொள்வார்.

திருட்டின் போது நகைகள் , பணம் என்பவற்றை மாத்திரமே திருடிக்கொள்வார். தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களை திருடுவதில்லை.

திருட்டின் பின்னர் , அந்த வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் மீண்டும் சென்று சந்தேகம் இல்லாத பிறிதொரு இடத்திற்கு மனைவியை காரில் வருமாறு அழைத்து , துவிச்சக்கர வண்டியை அருகில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் வீசி விட்டு , காரில் தப்பி கொழும்பு பிரதேசத்திற்கு சென்று விடுவார்கள்.

பின்னர் சில காலம் கழித்து மீண்டும் காரில் யாழ்ப்பாணம் வந்து திருட்டில் ஈடுபட்டு , தப்பி சென்று வந்துள்ளனர் . யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் கடந்த இரண்டு வருட காலமாக துவிச்சக்கர வண்டியில் முகத்தை மறைத்து முகமூடி அணிந்து வரும் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தப்பி செல்வது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு நபர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் , 300 பவுணுக்கும் அதிகமான நகைகள் மற்றும் பெருந் தொகை பணம் என்பவை களவு போயுள்ளதாக தெரிவந்துள்ளது.

காவல்துறையினரின் தீவிர விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் கொழும்பில் தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்த நிலையில் யாழில் இருந்து சென்ற விசேட காவல்துறை குழுவினர் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை மனைவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட நகைகளில் 90 பவுண் நகைகள் , நகைகளை விற்று கொழும்பில் அதிசொகுசு வீடு வாங்கிய பத்திரங்கள் , கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் , வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

அதேவேளை , திருட்டு நகைகளை கொழும்பில் அடகு வைத்த நபர்கள் மற்றும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான பிரதான சந்தேகநபரை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்ப்பாண காவல் நிலையத்தில் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரின் மனைவியை கைது செய்யவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் இருவரும் , நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா என்பது தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணைகளில் சந்தேக நபர் , தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி செல்ல முகவர் ஒருவருக்கு பெருந்தொகை பணம் கொடுத்துள்ளமையும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.