Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இலங்கைத் தமிழருக்கு கராத்தே கலையின் உயரிய "ஷிஹான்" பட்டம்! - சுவிஸ்

கராத்தே “ஷிஹான்” உரிமம் என்பது கராத்தே கலையில் மிகுந்த அனுபவமும் உயர்ந்த நிலையும் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு பெருமைக்குரிய சான்றிதழாகும்.

கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச செயலமர்வைத் தொடர்ந்து கருப்புப்பட்டி வழங்கும் நிகழ்வு  26,04,2026  சூரிச்சில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் நான்காவது தலைமுறை தலைமை பயிற்சியாசிரியர் கௌரவிக்கப்பட்டபோதே “ஷிஹான்” பட்டம் அளிக்கப்பட்டது. 

ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் சுவிட்சர்லாந்து நாட்டுக்கான பிரதிநிதியும், தலைமை ஆசிரியரும், சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தேசிய கராத்தே நடுவருமான சிகான் விபுலானந்தன் கௌரிதாசன், சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நகர பாராளுமன்றத்தின் முதல்வராக சமூக  செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார், சிரேஷ்ட மாணவர்கள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

"ஷிஹான்” (Shihan) பட்டம் ஜப்பான் இதோசுக்காய்  கராத்தே அமைப்பினால் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உயர்நிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த உரிமம் முதல் தடவையாக ஜப்பான் நாட்டவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கராத்தே “ஷிஹான்” உரிமம் என்பது கராத்தே கலையில் மிகுந்த அனுபவமும் உயர்ந்த நிலையும் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு பெருமைக்குரிய சான்றிதழாகும். 

“ஷிஹான்” என்ற பட்டம் ஒரு முதன்மை பயிற்சியாளரை குறிக்கிறது. சிறந்த தொழில்நுட்பத் திறன், ஆழமான அறிவு, வலுவான தலைமைத்துவம் மற்றும் இந்தக் கலையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரைக் குறிக்கும்.இந்த உரிமம் ஒரு பதவி உயர்வை மட்டுமன்றி, உயர்ந்த தரத்தில் கராத்தே பயிற்சி அளித்தல், வழிகாட்டுதல் மற்றும் அதன் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பையும் அங்கீகரிக்கிறது.