Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் - வைரமுத்து.

பைத்தியக்காரன் இழுக்கும் நேர்கோடு எப்போதும் நேராக வாராது!

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும்
மனிதர்களின் தோள் வலிமையைத் தாண்டித் 
தொழில் நுட்பப் பிசாசுகளின் கைகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டது போர் 

அணு ஆயுத அழிவுகள் அனுமானிக்க முடியாதபடி இருக்கும் 
பைத்தியக்காரன் இழுக்கும் நேர்கோடு  எப்போதும் நேராக வாராது;
போரும் அப்படித்தான். நமது சாப்பாடும் தூக்கமும்
ஏதோ ஒரு நாட்டின் நகர்வோடு முடிச்சுப் போடப்பட்டுவிட்டது

ஈரானின் "ஹோர் முஸ்" நீரிணை மூடப்பட்டுவிட்டால்
தெற்காசியாவின் ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும்
ஒவ்வொரு வீட்டு உண்டியலும் களவாடப் படும்

மூளும் போர். நீளும் போராக இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும்
ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நாற்காலிகளில் ஏறிநின்று 
பேசவேண்டும். ‘போர் ஒழிக' இல்லையேல் ஒவ்வொரு நாட்டுச் சூரியனும்  மூடப்படும்

தொலைக்காட்சிகளின். போர்க் காட்சிகளை. வாண வேடிக்கையென்று. காணவேண்டாம் யாரும் அதுவே
சொந்த வீதியில் நடந்தால். என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள்
எல்லா மனிதரும்  போருக்கு எதிரான பதாகையாக வேண்டும்.