Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஈரான் இஸ்ரேல் யுத்தத்தால் யாழில் எரிபொருளுக்கு அலைமோதும் மக்கள்!

மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையாக குவிந்தனர்.

ஈரான் இஸ்ரேல்  யுத்தத்தால் யாழில் எரிபொருளுக்கு அலைமோதும் மக்கள். மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையாக குவிந்தனர். ஈரான் இஸ்ரேல் யுத்தம் தொடங்கி சில  மணித்தியாலமே ஆன நிலையில் யாழில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்ப்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிலையத்தில் முண்டியடித்து நின்றுகொண்டிருக்கின்றனர்.

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் இல்லை - அச்சப்பட வேண்டாம்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதைக் காணமுடிகிறது. 
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். எம்மால் ஒரு மாத காலத்திற்குத் தடையின்றி இயங்க முடியும். எங்களிடம் உள்ள மற்றும் தற்போது நாட்டை வந்தடைந்து கொண்டிருக்கிறது. 

எனவே 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளது. அத்துடன் 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார். 
மேலதிகமாக எந்தவொரு கப்பலும் வராவிட்டாலும் கூட, எம்மால் இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும். 

அடுத்ததாக, நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே இவற்றை இறக்குமதி செய்கிறோம். மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் எங்களிடம் உள்ள கையிருப்பு ஒரு மாதத்திற்குப் போதுமானதாகும். எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.