Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சாட்டிக் கடற்கரையின் "சவுக்கு" மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் - வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா.

வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது.

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கடற் சாதாளைகளையும் அகற்றி சுற்றுலா தளத்தை சுற்றுலாவிகளை கவரும் வகையில் அழகுபடுத்த  வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விடையம் குறித்து உறுபினர் ஜெ.அனுசியாவினால் சபையில் முன்மொழிவு  சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -
வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது.

இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான்.
ஆனால் அவற்றுள் சில மரங்கக் பாதுகாப்பற்ற முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு உள்ளாக்கும் வகையிலும் இருக்கின்றன.
இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும்.
அதேபோன்று இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும்.

அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசகைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக  வலியுறுத்தினர்.
குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட நிலையில் சவுக்கு மர இலைகள் கிழைகள் வரும் மார்கழி மாதம் மவுசு மிக்கதாக இருப்பதனால் குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்திருந்தார்.

அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிடத்தக்கது.