பலதும் பத்தும் 18,02,2025 - புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம். இந்திய , இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு!
.

அண்மையில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 8A,B சித்தி பெற்ற மாங்குளம் மகாவித்தியாலய மாணவிசி.கோகுலப்பிரியா மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தார் அதன் முடிவு தற்போது இணையத்தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இவருடைய பெறுபேறு 9A. மாங்குளம் மகாவித்தியாலயத்தில் இதுவரை யாரும் எடுத்திராதபெறுபேற்றினை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
பொலிவியாவின் யோகல்லா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
பாணின் விலை குறைக்கப்பட்டது! ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தகஅமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பிரீமாமற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று தீர்மானித்திருந்தன.
அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும்ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு மாநிலமான கென்டக்கியில் மட்டும் 7 வயது குழந்தை உட்பட எட்டு பேர் இறந்தனர். இந்த எண்ணிக்கைஅதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று மாநில ஆளுநர் ஆண்டி பெஷியர் கூறினார். பெரும்பாலான இறப்புகள்கார்கள் அதிக நீரில் சிக்கியதால் ஏற்பட்டவை என்றும் கூறினார். எனவே மக்களே, இப்போதே சாலைகளைத் தவிர்த்து உயிருடன் இருங்கள் என்று அவர் கூறினார். ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் ஒரு வீட்டின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்! - சபையில் அமைச்சர் அறிவிப்பு. எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உரிய முறையில் வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தற்போது வழங்கப்படக்கூடியஅனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளோம். இந்த நிலையில் புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பளை தம்பகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றையதினம்(17) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களால்பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல்குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை மேலும்அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ தீர்மானித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும்இ வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊடாக சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வாரத்திற்கு ஐந்துநாட்களுக்கு ஒரு விமானத்தை இயக்குகிறது. இந்தநிலையில், எதிர்காலத்தில் மேலும் இரண்டு நாட்கள் கூடுதலாக ஒரு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள சிறப்பு அறிக்கை! இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது சேவையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகள், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள், பணியமர்த்தப்படுவதற்கு அல்லது மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பொலிஸ்மருத்துவமனையில் பொருத்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும்பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவ அறிக்கையில் ஒரு அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்தால், அந்த அதிகாரி மீண்டும்பணியில் சேர்க்கப்படமாட்டார் அல்லது பணியில் மீண்டும் சேர அனுமதிக்கப்படமாட்டார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய் ஷங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர்ஓமான் மஸ்கட் நகரில் இடம்பெறும் 8 ஆவது இந்து சமுத்திரமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வுசெய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர்மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கமுன்வைத்ததுடன், அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களையும் முன்மொழிந்தார். இந்த நிலையில் இன்று (18ஆம் திகதி) முதல் 25ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்றுபின்னர் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்படும். 2025ஆம் நிதியாண்டிற்கான வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை ரூ. 2இ200 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதமாகும்.
யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்தகுழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்வனா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்ற தாய் மாமனுமே உயிரிழந்தனர். இச்சம்பவம்குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தையும் தாய் மாமனும் கிணற்றினுள் விழுந்துள்ளனர். குழந்தை மேலே மிதந்ததை அங்கிருந்தவர்கள் அவதானித்தநிலையில் குழந்தையை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் குழந்தை உயிரிழந்தது. பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் குழந்தையின் மாமனை மீட்டு முதலுதவி அளித்தபோதும் அவரும்உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இரண்டு சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.