Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாமனிதர் நா.யோகேந்திரநாதன்....

.

 
போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்தும் போருக்குள் நிகழ்ந்தவற்றை தனது வாழ்நாளின் கடைசி வரையில் வரலாறாக்கும் ஆற்றல் பெற்றவராக நா.யோகேந்திரநாதன் ஐயா விளங்கியிருக்கிறார்.
அவருடைய நீந்திக்கடந்த நெருப்பாறு நூல்கள் ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தினாலும் விடுதலைப் போராட்டத்தின் கட்டுமாணங்களை, வாழ்வியலை, வீரத்தை, போர்த் திறத்தை, பண்பாட்டை, கட்டுக்கோப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் வல்லமை பெற்றவையாக விளங்கியிருக்கின்றன. போருக்குள் வாழ்ந்த பெரும் எழுத்தாளர்களாக சொல்லப்பட்டவர்களில் பலர் திசைமாறிப் பயணித்தபோதும் போருக்கு பின்னரும் அதே வீரியத்துடன் பயணித்த ஒரு சிலரில் நா.யோகேந்திரநாதனும் ஒருவர். நாட்டில் இருந்துகொண்டு இவ்வாறான படைப்பு இலக்கியங்களை படைக்கும் போது, அவரை பயங்கரவாத ஆதரவாளர் என்று சிறையில் கூட அடைக்கலாம். விசாரணைகளைக் கூட அவர் எதிர்கொண்டார். ஆனால் ஓய்ந்துவிடவில்லை. சாதாரணமாக தேசியத்தை நேசிப்பவர்கள் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களே.. ஆனால் அவர்களிலும் நாட்டிற்காக உழைத்தவர்களில் பெரிதாய் தெரியும் சிலரே மாமனிதர் என்பதாகத்தான் போர்க்கால மதிப்பளிப்புக்கள் நிகழ்ந்தன. கவிஞர் நாவண்ணன் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார், எழுத்தாளர் பொன்.கணேசமூர்த்தி மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார். நா.யோகேந்திரநாதன் போருக்குள்ளும் போருக்குப் பின்னரும் வீரியம் குறையாத ஈழத்தமிழ்களின் பெரு வரலாற்றை ஆவணமாக்கிய பெரும் பணியைச் செய்திருக்கிறார்.
அவரை வரலாறு மாமனிதராக பெருமதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே அவரையும் அவரது படைப்புக்களையும் அறிந்தவர்களின் பெரு விருப்பாகும்.