Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது வழக்குத் தாக்கல்!

.

யாழ். இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பனை மரங்களை வெட்டியவர்கள் மீது பனை அபிவிருத்திச் சபைத் தலைவரினால் சட்ட நடவடிக்கையின் பிரகாரம் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனங்கிளப்புப் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறைநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாறு சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவித்த அவர், பனை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தாம் விரைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தமது தேவைகளுக்கு பனை மரங்களை வெட்டுவதற்கு பொருத்தமான பனை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு கூடிய திட்டம் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் அதுவரை மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை எந்தப் பகுதியிலாவது பனை மரங்கள் வெட்டுவதை அறிந்தால் மக்கள் உடனடியாக 0779273042 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறும் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.