Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உலக போரியல் வரலாறே நெகிழ்ந்து போகும் காட்சி!

.

உலக போரியல் வரலாறே நெகிழ்ந்து போகும் காட்சி!
 
ஸ்ரீலங்கா இராணுவத்தளபதி கொத்தலாவல, யாழ்ப்பாணம் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்குதலைமைதாங்கியவர்.
யாழ் கோட்டை முகாம் கிட்டண்ணா தலைமையில் முற்றுகையிடப்பட்டது.
கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர்.
அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின்_தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை.
கோட்டைக்குள்ளிருந்த சிங்கள இராணுவத்தினர் பசியில் வாடினர்.
கொத்தலாவலவிடமிருந்து
கிட்டண்ணாவுக்கு வோக்கி மூலம் அழைப்பு வருகிறது.
கொத்தலாவலயின் குரல் தழுதழுக்கிறது. "சாப்பாடு இல்லாமல் துடிக்கிறோம், தண்ணீரும் இல்லை.
சமைப்பதற்கு விறகும் இல்லை, எங்களுக்கு சாப்பாடு தருவதற்கு எங்கள் ஹெலிகாப்டர்களை அனுமதிப்பீர்களா?"என்று கேட்கிறார்.
"உங்கள் ஹெலிகாப்டர்களுக்கு இங்கே அனுமதி இல்லை. வேண்டுமானால் நாங்கள் உங்களுக்கு சாப்பாடு தருகிறோம்.
ஒரு லாரியில் உணவுப் பொருட்களும் விறகும் அனுப்புகிறேன் என்றார் கிட்டண்ணா”
கொத்தலாவல சம்மதித்தார்.
சற்று நேரத்தின்பின் அனுப்பிய வாகனம் கோட்டைக்குள் சென்று உணவுகளை கொடுத்துவிட்டு வருகிறது. கொத்தலாவல நெகிழ்ச்சியோடு கிட்டண்ணாவுக்கு”நன்றி கூறுகிறார்.
அதன் பின்னரும் அதே இடத்தில் சண்டை ஆரம்பிக்கிறது.
பல இடங்களிலும் சாவடைந்த இருதரப்பு சடலங்களும் இவர்களின் சந்திப்பினூடாக பரிமாறப்பட்டன.!
போர்க்களத்தில் எதிரிக்கே உணவளித்த பெருமை விடுதலைப் புலிகளையே சாரும்!