அனோஜனின் மரண தண்டனை ரத்து

சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் அவர்களின் மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தீவிர இராஜதந்திர நகர்வுகள், சட்ட வல்லுநர்களின் தலையீடு மற்றும் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பலனாக இந்த விடுதலைத் தீர்ப்பு கிடைத்துள்ளது.

நீண்ட நாட்களாக பெரும் மனவேதனையிலும் எதிர்பார்ப்பிலும் காத்திருந்த அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இந்தச் செய்தி அளப்பரிய ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
அவர் விரைவில் தனது தாய்நாடு திரும்பி, குடும்பத்தினருடன் நலமாக இணைந்து வாழ வாழ்த்துவோம்!