மன்னார் யாழ்ப்பாணம் வீதி - பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிசார் சோதனை!

பூநகரி பொலிஸார் 20 கோடி பெறுமதியான கெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை  மீட்டுள்ளனர்! 20 கோடி பெறுமதியான கெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை பூநகரி பொலிசார் மீட்டுள்ளனர்.

பூநகரி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த போதைப்பொருட்கள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் யாழ்ப்பாணம் வீதி

ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிசார் சோதனை செய்வதற்காக நிறுத்தியுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்கள் திறுத்தாது பயணித்த நிலையில் துரத்தி சென்றபோது, போதைப் பொருட்களை வீசிவிட்டு நான்கு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேல குணதிலக தலைமையில் நடந்த குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 13 கிலோ 950 கிராம் கெரோயினும்இ 1040 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 20 கோடி என கணிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு மேற்கொண்ட குறித்த நடவடிக்கை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர பாராட்டியிருந்தார்.

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணை மேற்கொண்டு வரும் பூநகரி பொலிசார்இ கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் தொகையில் கெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.