அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று(25.09.2026) இடம்பெறவுள்ளது.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை இரண்டாண்டுகளுக்கு அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று(24) ஆரம்பமான நிலையில், இரண்டாம் நாளான இன்று இரவு 7 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.

இன்றுடன் நடைமுறைக்கு..

விவாதம் நிறைவடைந்ததும் மேற்படி சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு கோரப்படவுள்ளது. இந்தச் சட்டமூலங்களின் அரசமைப்புத் தன்மை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கமைய, 22 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தைச் சாதாரண பெரும்பான்மையுடனும் நிறைவேற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.