,
இலங்கை - ஜேர்மனி நட்புறவு திட்ட அடிப்படையில் ஜேர்மனி சென் பீட்டர்ஸ் திடலில் நடைபெறும் 'பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்' (JUKU PASCH) முயற்சியின் கீழ் கோதே (GOETHE) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 900 சர்வதேச மாணவர்கள் பங்குபெறும் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 07 மாணவர்களில் ஒருவராக யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் துகிஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம் மாதம் 7 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெறவுள்ள இம் முகாமில் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள், பயிலரங்குகள், விளையாட்டுகள், திரைப்படங்கள், பாரம்பரிய உலகளாவிய உணவுகளை சமைத்தல், மற்றும் தத்தமது கலாசார பாரம்ரியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பித்தக்கது.