கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!
தடுப்புச் சட்டத்தில் இளைஞன் கைதான விவகாரம் : நாமல் எழுப்பிய கேள்வி?
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்புகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளம் கலைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குறித்த தொடர்பான பாடல்களைப் பயன்படுத்தி
இசையும் கலை வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களாகக் கருதப்படும் நிலையில், சமீபத்திய உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது NPP அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பயன்படுத்திப் பகிர்ந்தபோது ஏன் இதே தரநிலைகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாடல் என்பது ஒரு கலை வடிவம். கலை மூலமாக மக்கள் தங்களுடைய வரலாறு, துன்பங்கள், துயரங்கள், வலிகள், போராட்டங்கள், வெற்றிகள் மற்றும் பெருமைக்குரிய தருணங்களை வெளிப்படுத்துகின்றனர். அதனால்தான் இலக்கியமும் இசையும் மக்களின் கண்ணாடி என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு சமூகத்தின் அனுபவங்கள், உணர்வுகள் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கின்றன.
இத்தகைய வெளிப்பாடுகளை வெளிப்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டு, ஒரு மக்களின் வரலாறையும் அனுபவங்களையும் பாடலாகப் பாடுவது பயங்கரவாதம் அல்லது தூண்டுதல் எனக் குற்றம் சாட்டப்படுமானால், அது அந்த நாட்டிற்கே அவமானமாகும். இவைதான் ஒரு நாட்டை அழிப்பதல்ல. இவைதான் ஒரு நாட்டைப் பிரிப்பதுமல்ல. குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் புரிபவர்கள் தான் ஒரு நாட்டை அழிக்கின்றனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து சட்டவிரோதமாக புத்தர் சிலைகளை நிறுவுபவர்கள் தான் பிரிவினையையும் பதற்றத்தையும் உருவாக்குகின்றனர். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமமான நீதியையும் உரிமைகளையும் வழங்காமல், இருவேறு அளவுகோல்களைப் பயன்படுத்தும் அரசாங்கங்கள் தான் பிரிவினையையும் மனக்கசப்பையும் வளர்க்கின்றன.
ஒரு நாடு வலுப்பெறுவது நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் தங்களுடைய வரலாறையும் அடையாளத்தையும் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையின் மூலமே அன்றி, கலைஞர்களின் குரல்களை ஒடுக்குவதால் அல்ல.