நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கான சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் பல்வேறு சேவைப் பணிகளை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை கண் சிகிச்சை நடத்துவதற்கு விநாயகப் பெருமானுடைய அருள் புரிந்துள்ளார். இந்த கண் சிகிச்சை முகாமின் நோக்கம் நோயாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான கண் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் ஆகும்.
இங்கு தெரிவு செய்யப்படுபவர்கள் சித்திரை மாத கடைசியில் யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செயல்படுத்தப்படும். அத்துடன் தேவைப்படுபவர்களுக்கு ம மூக்குக் கண்ணாடி வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினம் நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கான சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
உற்சவ காலத்தை முன்னிட்டு விநாயகப் பெருமானுடைய கருணையினால் இடம்பெறும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
தர்மகத்தாக்கள் சபை
மருதடி விநாயகர் ஆலயம் மானிப்பாய்.